காலி தேசிய வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை (20) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
