Home இலங்கை சமூகம் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் சடலமாக மீட்பு : படுகொலை என காவல்துறையினர் சந்தேகம்

ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் சடலமாக மீட்பு : படுகொலை என காவல்துறையினர் சந்தேகம்

0

அநுராதபுரத்தில் (Anuradhapuram) ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் மலசலகூடக் கழிவு நீர்த் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது அநுராதபுரம் , பிஹிம்பியகொல்லேவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலுள்ள மலசலகூடக் கழிவு நீர்த் தொட்டியில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர்  தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இராணுவச் சிப்பாய் 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டின் மலசலகூடக் கழிவு நீர்த் தொட்டியில் இருந்து துர்நாற்றம்
வீசுவதாக அயல் வீட்டார் சடலமாக மீட்கப்பட்டவரின் மகனிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சடலமாக மீட்கப்பட்டவரின் தாயும் மகனும் வீட்டின் மலசலகூடக் கழிவு
நீர்த் தொட்டியைச் சோதித்துப் பார்த்தபோது சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இதனை தொடர்ந்து சடலமாக மீட்கப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாயின் தாயும்
மகனும் இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் எவரேனும் நபரால் படுகொலை
செய்யப்பட்டு மலசலகூடக் கழிவு நீர்த் தொட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/dead-body-recovered-from-sewage-tank-1727485604

NO COMMENTS

Exit mobile version