Home இலங்கை சமூகம் வெளிநாட்டு வர்த்தகர்கள் இலங்கைக்கு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

வெளிநாட்டு வர்த்தகர்கள் இலங்கைக்கு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

0

குறுகிய கால வணிக விசா வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலதிபர்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக கூட்டு ஆடைச்சங்கங்களின் மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

குறுகிய கால வணிக விசா வழங்கும் முறைமை

குறுகிய கால வணிக விசா வழங்கும் முறைமை ஆகஸ்ட் 2 ஆம் திகதியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளமையினால், வெளிநாட்டு வர்த்தகர்கள் இலங்கைக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலை இலங்கைக்கு தேவையற்ற பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் மன்றம் கூறுகின்றது.

இலங்கை பொருளாதாரத்தின், குறிப்பாக ஆடைத் தொழிலின் எதிர்காலத்திற்கு வெளிநாட்டு வர்த்தக சமூகத்தின் பங்கேற்பு இன்றியமையாத காரணியாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version