Home இலங்கை குற்றம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனம்! எடுக்கப்பட்ட நடவடிக்கை

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனம்! எடுக்கப்பட்ட நடவடிக்கை

0

சட்டவிரோதமாக லேண்ட் க்ரூஸர்(Land Cruiser) வாகனத்தை இறக்குமதி செய்த வாகன விற்பனையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், இன்றையதினம்(05.02.2025) கொழும்பு மொரந்துடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இறக்குமதியாளர், பாணந்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணை 

இதேவேளை, சுங்கத் திணைக்களத்தின் அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட குறித்த வாகனம், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version