Home இலங்கை சமூகம் தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் ஒன்பதாவது பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் ஒன்பதாவது பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு

0

இலங்கை (Sri Lanka) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பப் பீடங்களுள் ஒன்றாக விளங்கும் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் எம்.எம். பாஸில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கலை கலாசார பீடத்திற்கான பீடாதிபதியாக பணியாற்றிய பேராசிரியர் பாஸிலின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய பீடாதிபதியினைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது, பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் (U.L Abdul Majeed) தலைமையில் பீடத்தின் கேட்போர் கூடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எட்டாவது பீடாதிபதி

இந்தநிகழ்வில் குறித்த வெற்றிடத்துக்காக பேராசிரியர் எம்.எம். பாஸில் போட்டியிட்டிருந்த நிலையில், இதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அவர் மீண்டும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

அத்தோடு, இவர் கடந்த 2021.08.16 ஆம் திகதி எட்டாவது பீடாதிபதியாக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

மேலும், இந்தநிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தினுடைய உயர் சபை உறுப்பினர்கள், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் (M.I. Naubar), சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஷ்ஹர் (M.R. Ahmed Ashar) மற்றும் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் ஏ.ஆர்.எம். சுல்பி (A.R.M. Sulpi) ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version