Home இலங்கை சமூகம் நாட்டில் இறப்பு மற்றும் பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் இறப்பு மற்றும் பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

நாட்டில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல (lakshika ganepola) தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாமல், பல்வேறு நோய் நிலைமைகளுக்கு ஆளாகி மனநல பிரச்சினைகள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படுமா..! அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

இறப்பு மற்றும் பிறப்பு எண்ணிக்கை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2000ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு சராசரி இறப்பு எண்ணிக்கை 140,000ஆக காணப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது 180,000ஆக அதிகரித்துள்ளது.

மக்களுக்கான கொடுப்பனவு குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

2020ஆம் ஆண்டளவில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000ஆக காணப்பட்டது.

இந்த நிலையில், அந்த தொகை தற்போது 280,000 வரை வீழ்ச்சிடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

இளம் தாயின் கொடூர செயல் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version