மட்டக்களப்பு, வாழைச்சேனை – புலிபாய்ந்தகல் பகுதியில் வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயிருந்த இருவர் நேற்று (26) சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்படி இருவரும் நேற்று முன்தினம் மாலை அந்தப் பகுதியிலுள்ள பாலமொன்றைக் கடப்பதற்கு
முற்பட்ட வேளையில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
52 மற்றும் 71 வயதுடைய இருவர்
இந்தநிலையில், காணாமல்போயிருந்த குறித்த இருவரும் நேற்று சடலங்களாக
மீட்கப்பட்டனர்.
சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்வாறு
உயிரிழந்தனர் என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
