திருகோணமலை வாகரை கடற்கரையில் நேற்று(07.12.2025) அடையாளம் காண முடியாதவாறு சடலம் ஒன்று
கரையொதுங்கியுள்ளது.
கடலில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் குறித்த சடலம் பல நாட்களின் பின்
கரையொதுங்கியுள்ளது.
கடற்படை தேடி வருகின்ற நிலையில்
சுண்டிக்குளம் சாலை கடற்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐந்து கடற்படை
வீரர்கள் தொடுவாய் வெட்டச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.
இவர்களை பல நாட்களாக கடற்படை தேடி வருகின்ற நிலையில் நேற்றைய தினம் திருகோணமலை
வாகரை பகுதியில் இனம் தெரியாத சடலம் ஒன்று இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.
சடலத்தை அடையாளம் காணும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
