Courtesy: Subramaniyam Thevanthan
கிளிநொச்சி (Kilinochchi) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள
புனர்வாழ்வு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து புனர்வாழ்வு
பெறுவதற்காக நேற்றைய தினம் (08.03.2025) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரே சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த 26
வயதுடைய எஸ் லக்சன் என்னும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக இனம்
காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர்
உறவினர்கள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
