Home இலங்கை சமூகம் கொழும்பில் பாடசாலை மாணவியின் விபரீத முடிவு: அம்பலமாகும் பகீர் தகவல்கள்

கொழும்பில் பாடசாலை மாணவியின் விபரீத முடிவு: அம்பலமாகும் பகீர் தகவல்கள்

0

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவியொருவர் கடந்த சில நாட்களுக்கு முன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட விடயமானது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதற்காக முன்னதாகவே பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் உட்படுத்தப்பட்டிருந்தாகவும் பல்வேறு தரப்பினரால் போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், குறித்த விடயங்களை முற்றாக மறுத்துள்ள உயிரிழந்த மாணவியின் பெற்றோர், சமூகத்திற்கு இந்த துயர சம்பவத்திற்கான காரணத்தை வெளிப்படுத்த முன்வந்துள்ளனர்.

இதன்போது, உயிரிழப்பதற்கு முன்னதாக மாணவி கைப்பட எழுதிய கடிதமொன்றை பெற்றோர் இன்று (04) இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு ஒப்படைத்துள்ளனர்.

அந்த கடிதத்தில் மாணவி உயிரிழப்பதற்கு முன்பு நடந்த அனைத்து சம்பவங்களையும் விவரமாக எழுதியுள்ளதுடன், அவரின் மரணத்திற்கு காரணமான நபர்கள் தொடர்பான விடயங்களையும் அதில் கூறியுள்ளார்.

இதன்படி, மாணவியின் பெற்றோர் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கியுள்ள தனிப்பட்ட நேர்காணலில் மாணவியின் இந்த முடிவுக்கு காரணமான விடயங்களையும் அதன் பின்னணியில் மிகவும் இழிவான முறையில் செயற்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும் பின்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்… 

 

https://www.youtube.com/embed/GWOLyNogL4g

NO COMMENTS

Exit mobile version