Home இலங்கை சமூகம் நுவரெலியாவில் அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை

நுவரெலியாவில் அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை

0

நுவரெலியா மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 77ஆகவும்  காணாமல் போனோர் எண்ணிக்கை 73 நுவரெலியா மாவட்ட செயலாளர் துசாரி தென்னகோன் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று 02.12.2025 காலை 10 மணிவரையிலான அனர்த்தம் தொடர்பான அறிக்கையை நுவரெலியா மாவட்ட செயலாளர் துசாரி தென்னகோன் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.

அதன்படி நுவரெலியாவில் உயிரிழந்தோரின் தொகை 77 ஆகவும் காணாமல் போரின் தொகை 73 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

அறிக்கை விபரம்

இந்த அறிக்கையின்படி நாள்தோறும் உயிரிழந்தவர்களின் தொகையும் காணாமல் போனோரின் தொகையும் அதிகர்த்த வண்ணமே உள்ளது.

இது எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கலாம் எனவும் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் தமக்கு தகவல்களை சேகரிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு சில பகுதிகளில் தொடர்புகளை ஏற்படுத்தி கிராம உத்தியோகஸ்தர்கள் பிரதேச செயலாளர்களிடம் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் இருப்பதாகவும் பாதைகள் முற்றாக சேதமடைந்துள்ளதால் அங்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

அதே நேரம் தரை வழியாக செல்ல முடியாத கொத்மலை மதுரட்ட ஹங்குரன்கெத்த போன்ற பகுதிகளுக்கு உழங்கு வானூர்தி மூலமாக உணவுப் பொருட்களையும் ஏனைய பொருட்களையும் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்காக விமானப்படையினர் இராணுவத்தினர் காவல்துறையினர் அரசசார்பற்ற நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, மேலும் அரசாங்கத்தின் உதவிகள் தனியார் துறையினரின் உதவிகள் என்பன நிவாரணங்களை வழங்குவதற்காக கிடைத்துவருவதாகவும் தொடர்ந்தும் உதவி செய்யக்கூடியவர்கள் எங்களுடன் தொடர்பு கொண்டால் நாம் சரியானவர்களுக்கு அந்த உதவிகளை கொண்டு சேர்ப்பதற்கு வழிகாட்ட முடியும் அதே நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பாதைகளை திருத்தும் பணிகளைபாதை அபிவிருத்தி அதிகாரசபை உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் இணைந்து இராணுவத்தினரின் உதவியுடன் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

செய்தி – தியாகு

NO COMMENTS

Exit mobile version