Home இலங்கை கல்வி தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா.!கல்வி அமைச்சின் தீர்மானம்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா.!கல்வி அமைச்சின் தீர்மானம்

0

சர்ச்சைக்குள்ளான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்காக 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமையினால் பிரச்சினையான சூழ்நிலை உருவானதுடன், பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இறுதி தீர்மானம்

அத்துடன், புலமைப்பரிசில் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளைஆரம்பித்திருந்ததோடு, கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதானிகளும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை கருத்தில் கொண்டு மீண்டும் பரீட்சை நடத்தப்படுமா? இல்லையா? குறித்த குழு தீர்மானிக்கும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version