நாள் ஒன்றில் 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
விண்ணப்பங்கள்
முன்னதாக நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பும் எந்தவொரு நபருக்கும் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு தனி சாளரம் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேபால கூறியுள்ளார்.
மேலும், அந்த சாளரத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், குழுவினால் பரிசீலிக்கப்பட்டு கடவுச்சீட்டுக்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.