Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி

இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி

0

இலங்கையின் (Sri Lanka) முதன்மை பணவீக்கம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics) தெரிவித்துள்ளது.

அதன்படி, தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் (NCPI) ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்க வீதம் 2025 ஜனவரி மாதத்தில் -4.0% ஆகக் குறைந்துள்ளது.

இது 2024 டிசம்பர் மாதத்தில் -2.0% ஆக பதிவாகி இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணவீக்கத்தில் வீழ்ச்சி

அத்துடன், உணவுப் பணவீக்கமும் 2024 டிசம்பரில் -1% ஆக இருந்த நிலையில், 2025 ஜனவரியில் -2.5% ஆகக் குறைந்துள்ளது.

இதேவேளை, உணவு அல்லாத பணவீக்கம் 2024 டிசம்பரில் பதிவான -2.9% இலிருந்து -5.2% ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/decline-in-sri-lanka-s-inflation-1740137612

NO COMMENTS

Exit mobile version