Home இலங்கை பொருளாதாரம் சர்வதேச அளவில் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தில் சரிவு

சர்வதேச அளவில் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தில் சரிவு

0

சர்வதேச அளவில் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கள் வெளிநாட்டு நாணய கையிருப்புகளுக்காக அமெரிக்க டொலர்களை மட்டும் பயன்படுத்தாமல், ஏனைய மாற்று நாணயங்களையும் பயன்படுத்துகின்றமையே இதற்கான காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நான்கு நாணயங்களில், அமெரிக்க டொலர், யூரோ, ஜப்பானிய யென் மற்றும் பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியன உள்ளன.

வெளிநாட்டு இருப்புக்களுக்கான அமெரிக்க டொலரின் பயன்பாடு

கடந்த இரண்டு தசாப்தங்களாக, யூரோ, யென் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு இருப்புக்களுக்கான அமெரிக்க டொலரின் பயன்பாடு குறைந்துள்ளது.

அத்துடன், புதிய மாற்று நாணயங்களாக அவுஸ்திரேலிய டொலர், கனேடிய டொலர், சீன யுவான், தென்கொரிய வொன் மற்றும் சிங்கப்பூர் டொலர் மற்றும் சுவீடன், நோர்வே போன்ற நோர்டிக் நாடுகளின் நாணயங்கள், உலகின் மத்திய வங்கிகள் தங்கள் வெளிநாட்டு இருப்புக்களை வலுப்படுத்த அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டு கையிருப்பில் பாரம்பரியமற்ற நாணயங்கள் சேர்க்கப்பட்டாலும், உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டொலர்தான் மிகவும் சக்திவாய்ந்த நாணயமாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version