அநுராதபுரம் (Anuradhapura) – குருநாகல் (Kurunegala) பாதையில் நடந்த கோர விபத்தில் பொது பாதுகாப்பு அமைச்சரின் சாரதி மற்றும் அவரது மனைவி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வாகனத்தின் சாரதியான டொன் அஜித் பிரியந்த மற்றும் அவரது மனைவி மற்றும் அவர்களது இரு குழந்தைகளுடன் அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்துக்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சாரதி மற்றும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,படுகாயமடைந்த இரு குழந்தைகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகன் பலத்த காயங்களுடன் தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மகள் அம்பன்போல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
you may like this
https://www.youtube.com/embed/F98tzZ5ZAhw
