Home இலங்கை குற்றம் தெஹிவளை துப்பாக்கிச் சூடு: வெளியான அதிர்ச்சி தகவல்கள்

தெஹிவளை துப்பாக்கிச் சூடு: வெளியான அதிர்ச்சி தகவல்கள்

0

தெஹிவளையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பிரபல போதைப் பொருள் வர்த்தகரான வெலே சுதாவின் மைத்துனர் என்று தெரிய வந்துள்ளது.

வெலே சுதாவின் மைத்துனரான பஸ் அசித என்றழைக்கப்படும் ரஜ்கல் கொடகே சுதத் குமார என்பவரே இன்று(18) மாலை இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். 

அவர் தற்போது களுபோவிலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகர்

காயமடைந்த சுதத் குமாரவின் மைத்துனரான வெலே சுதா தற்போது மரண தண்டனைக் கைதியாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சுதத் குமாரவின் இன்னொரு நெருங்கிய உறவினரான படோவிட அசங்க தற்போது கல்கிசை பிரதேசத்தில் பிரபல போதைப் பொருள் வர்த்தகராக செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version