Home இலங்கை சமூகம் வடக்கு மாகாண வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

வடக்கு மாகாண வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

0

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை காலை இடம்பெறவுள்ளது.

அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளது.குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும்
இன்று காலை 7 மணிமுதல் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

வவுனியாமாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்தியநிலையமாக செயற்ப்பட்டுவரும்
சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும்
வாக்களிப்பு நிலையங்களிற்கு பொலிஸாரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம்
எடுத்துச்செல்லப்பட்டது.

இதேவேளை வவுனியாவில் 128585 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல்
கடைமைகளுக்காக பொலிஸார் உட்பட 2500 ற்கும் மேற்ப்பட்ட அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்தி – திலீபன்

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள் இன்றையதினம்
எடுத்துச் செல்லப்படுகின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள 511 வாக்குச் சாவடிகளுக்கு இவ்வாறு
பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்
இந்த நிகழ்வு இடம்பெற்றது.

செய்தி – தீபன், கஜி

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான 137 வாக்களிப்பு
நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில்
இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான
நாடளாவிய ரீதியில் இடம்பெற இருக்கின்ற தேர்தலுக்காக முல்லைத்தீவு
மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 137 வாக்களிப்பு நிலையங்களிற்கே இவ் வாக்கு
பெட்டிகள் இன்று (20.09.2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அரச உத்தியோகத்தர்கள் கடமை

இம்முறை தேர்தலில் 38 வேட்பாளர்கள்
போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள
நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் காலை 7 மணி முதல் வாக்கு
பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தலில் 1506 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 500
பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்தி – சதீசன்

NO COMMENTS

Exit mobile version