நாட்டில் மரக்கறி கொள்வனவில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என பேலியகொடை மெனிங் சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
நுகர்வோரின் கொள்முதல் திறன் பெரிதும் குறைந்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மாறிய பொருளாதார நிலைமை, வழக்கமான ‘தேவை அதிகரிக்க விலை உயரும்’ என்ற அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களின் காசுக் கையிருப்பு (cash flow) குறைந்துவிட்டது, அதனால்தான் அவர்கள் குறைவாகவே மரக்கறிகளை கொள்வனவு செய்கின்றார்கள் என மெனிங் சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ். எம். உபசேன தெரிவித்துள்ளார்.
இதனால் விலை குறைந்துவிட்டது. சாதாரணமாக அதிக உற்பத்தி வந்தால் மட்டுமே விலை குறையும். ஆனால் இப்போது நாம் பார்க்கும் நிலைமையானது வித்தியாசமானது. தேவையான பொருட்களான மரக்கறி வகைகளுக்கான விலை குறைந்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பகுதி மீது நிலவும் அரசியல் பதற்றம், எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்கும் பட்சத்தில், மரக்கறி விலையை உயர்த்தும் என தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால், போக்குவரத்து செலவுகள் உயரும். அது நேரடியாக மரக்கறி விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உபசேன குறிப்பிட்டுள்ளார்.
