Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் ஒரு வருடத்திற்கு முன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

முல்லைத்தீவில் ஒரு வருடத்திற்கு முன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

0

முல்லைத்தீவு – வவுனிக்குளம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று (29-07-2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

கடந்த வருடம் இதே நாளில் முல்லைத்தீவு பாண்டியன் குளம் சென்று திரும்பி கொண்டிருந்த குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி ஒரு வருடமாகியும் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் அசமந்தபோக்கே நிலவி வருவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீதியை வலியுறுத்தி போராட்டம்

இந்த நிலையில் குறித்த இளைஞனின் முதலாம் ஆண்டு நினைவு நாளாகிய இன்று நீதியை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மல்லாவி பேருந்து நிலையத்திலிருந்து மல்லாவி பொலிஸ் நிலையம் வரை குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் – மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version