Home இலங்கை சமூகம் பேருந்து சங்கங்கள் சுகாதாரத்துறையினரிடம் விடுத்துள்ள கோரிக்கை

பேருந்து சங்கங்கள் சுகாதாரத்துறையினரிடம் விடுத்துள்ள கோரிக்கை

0

நீண்ட தூர பயண பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு, உணவு வசதி செய்து தரும் உணவகங்களின் தரம் குறித்து ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதாரத்துறையினரிடம் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

தரமில்லாத வசதிகள்

அந்தந்த உணவகங்களில் உணவு அசுத்தமாக இருப்பதாகவும், கழிவறை வசதிகள் தரமில்லாமல் பராமரிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பல வருடங்களாக உணவு, பான பிரச்சினை, சுகாதார பிரச்சினை என்பன தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version