அரசுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தியதற்காக ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள்,
அந்த இழப்புகளை வட்டியுடன் சேர்த்து திருப்பிச்செலுத்த வேண்டும் என்ற
கோரிக்கைகளை பரிசீலிக்க, இலஞ்ச ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழு
ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், அந்த கோரிக்கைகளை நீதிமன்றங்கள் ஏற்றால், அதனை பரிசீலிக்கலாம்
என்று
இலஞ்ச ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வழக்குகளைத் தீர்ப்பதற்காக வட்டியுடன்
இழப்புகளைத் திருப்பிச் செலுத்தும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பு
இதனால் விசாரணைக்குப் பிறகு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் சிறைத்
தண்டனையைத் தவிர்க்கலாம்.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை
சமர்ப்பிக்கப்பட்டவுடன், அவர்கள் சந்தித்த நிதி இழப்பை செலுத்தத் தயாராக
இருந்தால், வழக்கைத் தொடர வேண்டாம் என்று அவர்கள் செய்யும் எந்தவொரு
கோரிக்கையையும் பரிசீலிப்பது பொருத்தமானது என்று ஆணையகம் கருதுவதாக, தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இதன்படி, வட்டியுடன் நிதி இழப்புக்கு கூடுதலாக, விசாரணைக்கு ஏற்பட்ட செலவுகள்
மற்றும் நீதிமன்ற செலவுகளையும் செலுத்துமாறு ஆணையகம் குற்றம்
சாட்டப்பட்டவரிடம் கேட்கும்.
இதன்போது, விசாரணைக்கு ஏற்பட்ட செலவுகள் மற்றும் நீதிமன்ற செலவுகளையும்
செலுத்துமாறு ஆணையகம் குற்றம் சாட்டப்பட்டவரிடம் கேட்கும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
