Home இலங்கை குற்றம் நாட்டிலிருந்து இரகசியமாக தப்பியோடிய பெண்: விசாரணையில் வெளியான தகவல்

நாட்டிலிருந்து இரகசியமாக தப்பியோடிய பெண்: விசாரணையில் வெளியான தகவல்

0

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழுத்தலைவர் தெமட்டகொட சமிந்தவின் மனைவி நாட்டை விட்டுத் தப்பிச்சென்றுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவினரின் விசாரணை தொடர்பில் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் நாட்டை விட்டுத்தப்பிச்சென்றுள்ளார்.

இந்நிலையில், நாட்டிற்கு வந்தவுடன் அவரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குடிவரவு குடியகழ்வுக் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

140 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

இதேவேளை, வாசனா தில்ருக்ஷி மற்றும் தெமட்டகொட சமிந்தவின் சகோதரர் தெமட்டகொட ருவான் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இவர்களின் சுமார் 140 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version