Home இலங்கை அரசியல் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்

0

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (25) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடல் 

இந்த கலந்துரையாடலில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்
தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம்
அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்
பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்,
பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், ஊடகப்
பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி
ஆனந்தன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் க.துளசி உள்ளிட்டவர்கள்
கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/democratic-tamil-national-alliance-discussion-1727285140

NO COMMENTS

Exit mobile version