Home இலங்கை சமூகம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்: ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்: ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

0

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கள் தொர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

குறித்த ஆரப்பாட்டமான இன்று(11.11.2024) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

கொரிய தொழில் வாய்ப்புகள்

இதன்போது, தமக்கு கொரிய தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என கூறியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

அத்துடன், கட்டாயம் எமக்கான தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறி, தேங்காய்களை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இதற்கான தீர்வை எதிர்வரும் பத்து நாட்களுக்குள் வெளியிடுமாறு ஆர்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/demonstration-in-front-foreign-employment-bureau-1731326752

NO COMMENTS

Exit mobile version