Home இலங்கை சமூகம் நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்கள்: முன்னெடுக்கவுள்ள விசேட வேலைத்திட்டம்!

நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்கள்: முன்னெடுக்கவுள்ள விசேட வேலைத்திட்டம்!

0

அண்மைய நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக டெங்கு நுளம்புகள் பரவுவதை குறைக்கும் வகையில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த விசேட வேலைத்திட்டம் மேல் மாகாணத்தை மையமாக வைத்து இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

விசேட வேலைத்திட்டம்

அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இன்றும்(26) நாளையும்(27) இந்த வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, நாட்டில்  இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 899 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

டெங்கு நோயாளர்கள்

வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 397 பேரும், மத்திய மாகாணத்தில் 1977 பேரும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்பதுடன் 4 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாயமுள்ள வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

மேலும், இந்த ஆண்டில் இதுவரை 22 ஆயிரத்து 943 டெங்கு நோயாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version