Home ஏனையவை வாழ்க்கைமுறை நாட்டில் அதிக அபாய நிலையில் பரவும் நோய்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் அதிக அபாய நிலையில் பரவும் நோய்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 10 பிரதேசங்களில் டெங்கு அதிக அபாய நிலையில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 16 ஆம் திகதி வரை 38088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 24.8 சதவீத நோயாளிகள் அதாவது 9451 நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 4381 நோயாளிகள், களுத்துறை மாவட்டத்தில் 2097 நோயாளிகள் மற்றும் மேல் மாகாணத்தில் 15929 நோயாளிகள், இது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 41.8 சதவீதமாகும்.

நோய் பரவல் விபரங்கள் 

மத்திய மாகாணத்தில் 3895 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளிகளில் இது 10.2 சதவீதமாகும். வடமேற்கு மாகாணத்தில் 2521 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது சதவீதமாக 6.6 சதவீதமாகும்.

வட மாகாணத்தில் 4738 நோயாளர்களும் தென் மாகாணத்தில் 2834 நோயாளர்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 3875 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.

இந்த மாதத்தில் 1446, கடந்த மாதம் 3897, ஜூலையில் 4506, மே மாதத்தில் 2647, ஏப்ரலில் 2234, மார்ச்சில் 3615, பெப்ரவரியில் 6007, ஜனவரியில் 10417 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டில் டெங்குவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version