Home இலங்கை சமூகம் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

டெங்கு நுளம்பு பெருகுவதைத் தடுக்கும் வகையில் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 37 ஆயிரத்து 233 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல் 

அதற்கமைய மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 490 ஆகும்.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 17 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version