Home இலங்கை சமூகம் யாழ். மக்களுக்கு வைத்தியர் கேதீஸ்வரனின் எச்சரிக்கை..!

யாழ். மக்களுக்கு வைத்தியர் கேதீஸ்வரனின் எச்சரிக்கை..!

0

யாழில் டெங்கு நோய்ப் பரவல் சடுதியாக அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என யாழ்.பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

யாழில் நேற்றையதினம் (19.11.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“யாழ். மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் பருவ மழைக்கு பின்னர் டெங்கு நோய்ப் பரவல் சடுதியாக அதிகரித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் இந்த வருடத்தில் 1,220 பேர் டெங்கு நோயுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகமாகும்.

எனினும், யாழ். மாவட்டத்தில் இந்த வருடத்தில் டெங்கு நோய் தொடர்பான இறப்புக்கள் பதிவு செய்யப்படவில்லை.

பொதுமக்கள், வீடுகள், தங்கள் வேலைத்தளங்கள், பாடசாலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அழிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில், 

NO COMMENTS

Exit mobile version