Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

மட்டக்களப்பில் ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

0

கிழக்கு மாகாணத்திற்கு இரண்டு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகை தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பில் உள்ள பல பகுதிகளுக்கு இன்றைய தினம்(22.06.2024) விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி பல விடயங்களை ஆராய்ந்து வருகின்ற நிலையில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் முற்றாக சேதம் ஆக்கப்பட்ட சீயோன் தேவாலயத்தை பார்வையிட வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜனாதிபதியிடம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் பல வினாக்களை எழுப்புவதற்காக காத்திருந்த நிலையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினால் அவ்விடத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சனல் 4 காணொளி

அண்மையில் சனல் 4 ஊடக நிறுவனம் காணொளி மூலமாக உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாகவும் சூத்திரதாதிகள் தொடர்பாகவும் பல விடயங்கள் வெளிப்படுத்தியுள்ள நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் பல உயிர்கள் கொல்லப்பட்டவுடன் முற்றாக சேதம் அடைந்த சியோன் தேவாலயத்தில் வருகை தந்த ஜனாதிபதியிடமே ஊடகவியலாளர்கள் வினாக்களை எழுப்ப காத்திருந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் விதத்தில் ஜனாதிபதி செயலகம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களை புறக்கணித்து உள்ளமை ஊடக  சுதந்திரம் தொடர்பாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version