Home இலங்கை குற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய ஐரோப்பிய நாட்டு யுவதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய ஐரோப்பிய நாட்டு யுவதி

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது பொதிகளில் மறைத்து வைத்திருந்த 57 மில்லியன் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை விமான நிலையத்தை விட்டு வெளியேற்ற முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் 23 வயதுடைய டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவராகும்.

போதைப்பொருள்

தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு குஷ் போதைப்பொருள் கொண்டு சென்ற பெண், பின்னர் நேற்று இரவு இலங்கைக்கு வருகைத்தந்தள்ளார்.

நேற்று இரவு சுமார் 07.05 மணியளவில் இண்டிகோ விமான நிறுவனத்தின் 6.E.- 1073 விமானத்தில் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவர் கொண்டு வந்த சூட்கேஸில் 25 காற்று புகாத சிற்றுண்டிப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 05 கிலோ மற்றும் 700 கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணும் அவர் கொண்டு வந்த போதைப்பொருளும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version