Home இலங்கை குற்றம் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 11 இலங்கையர்கள் நாடு கடத்தல்

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 11 இலங்கையர்கள் நாடு கடத்தல்

0

இணைய குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 11 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (06) காலை நாட்டை வந்தடைந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்கர்கள் ஐக்கிய அரபு இராச்சிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஜூலை 1 ஆம் திகதி செய்திகள் வெளியாகியிருந்தன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக விசாரணை

இது தொடர்பில் அந்நாட்டு இலங்கை தூதரகம் நடத்திய விசாரணையில், இணையவழி கடத்தல், விபச்சாரத்தில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 37 இலங்கையர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஏனைய இலங்கையர்களும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த குழுவினர் நாடு திரும்பிய பின்னர் மேலதிக விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version