Home இலங்கை குற்றம் சர்வதேச பொலிஸாரினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டவர் நாடு கடத்தல்

சர்வதேச பொலிஸாரினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டவர் நாடு கடத்தல்

0

சர்வதேச பொலிஸாரினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சீன பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

மாலைத்தீவில் இருந்து நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

பணமோசடி

சீனாவில் பாரியளவில் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் 28 வயதுடைய சீன பிரஜையே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version