Home இலங்கை கல்வி க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

0

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (26.04.2025) வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது.

உயர்தரப் பரீட்சை

உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றிருந்த நிலையில், 2,53,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 79,795 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாகும்.

நாடு முழுவதும் 2,312 மத்திய நிலையங்களிலும் 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்றது.

முன்னதாக, ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், பல நடைமுறை சிக்கல்களே தாமதத்திற்குக் காரணம் என்று பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அல்லது அடுத்து ஒரு சில தினங்களில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version