தமிழ் நாட்டின் நிதி மற்றும் சுற்றுச் சூழல் கால நிலை மாற்ற அமைச்சர் தங்கம்
தென்னரசு மற்றும் தமிழகம் சென்றுள்ள இலங்கை பெருந்தோட்டம் மற்றும் சமூக
உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (21) சென்னையில் நடைபெறறுள்ளது.
மலையக மாணவர்களுக்கான
இதன் போது இலங்கை தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக மலையக மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்பு பற்றி பிரதானமாகக்
கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மலையக மக்களின் கலை, இலக்கிய ,சமூக,பொருளாதார விடயங்கள் பற்றியும் அமைச்சருடன் காத்திரமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது பிரதியமைச்சர் பிரதீப்புடன் சமூக ஆர்வலர்
விக்ரமசிங்கவும் இணைந்திருந்தார்.
