Home இலங்கை அரசியல் தேசபந்துவுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள முக்கிய நடவடிக்கை: இடம்பெறவுள்ள விவாதம்

தேசபந்துவுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள முக்கிய நடவடிக்கை: இடம்பெறவுள்ள விவாதம்

0

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) பதவி நீக்கம் செய்வது குறித்து முக்கியமான விவாதத்தை நடத்த நாடாளுமன்ற அலுவல்கள் குழு திட்டமிட்டுள்ளது.

குறித்த விவாதம் எதிர்வரும் ஒகஸ்ட் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2002 ஆம் ஆண்டு ஐந்தாம் இலக்க அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.

சட்ட நடைமுறை

இலங்கையின் சட்ட நடைமுறையாக்கத்தில் கொந்தளிப்பான காலகட்டத்தில் காவல்துறை மா அதிபராக பணியாற்றிய தேசபந்து தென்னகோன், தனது நடத்தை மற்றும் தலைமைத்துவம் குறித்து பெருகிவரும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், அவரது நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு, அண்மையில் சபாநாயகரிடம் தமது அறிக்கையை கையளித்திருந்தது.

இந்த குழு, தேசபந்து தென்னகோன் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளதாக தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version