இடைநிறுத்தப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பரிந்துரைகளுடன் அறிக்கை தயாரிப்பது இறுதி கட்டத்தில் இருப்பதாக குழு தெரிவித்துள்ளது.
சாட்சியமளிப்பு
தேசபந்து தென்னகோன் செய்ததாகக் கூறப்படும் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு சமீபத்தில் சாட்சியமளிப்பு பணியை முடித்தது.
உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன குழுவின் தலைவராக உள்ளார்.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி நீல் இத்தவால மற்றும் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம். லலித் ஏகநாயக்க ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
