பதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து அகற்றுவதற்கான விசேட விசாரணைக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து விலக்குவதற்காக உச்சநீதிமன்ற நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையில் விசேட விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்குழு
நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் அதன் உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை (23) இந்த விசாரணைக்குழு முதற்தடவையாக கூடி விடயங்களை ஆராய்ந்தது.
இன்றைய தினம் குறித்த விசாரணைக்குழு மீண்டும் ஒன்றுகூடி தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் சாத்தியமான பரிந்துரைகளை முன்வைப்பது குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
