உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் தேர்தல் திணைக்களத்தின் இணையத்தளத்தினில் பதிவேற்றப்படாமை தொடர்பில் சமூக ஆர்வளர்களால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த 24.04.2025 அன்று தேர்தல் திணைக்களத்தினுடைய உத்தியோகபூர்வ
இணையத்தளதத்தினில் இலங்கையில் எதிர்வரும் 06ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள
உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்
வேட்பாளர்களின் விபரங்களை அறிந்து கொள்வதற்கான வழி முறையயாக விபரங்களை வெளியிடுவதாக தேர்தல்
திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
தபால் மூல வாக்களிப்பு
இதன்படி குறித்த அறிவிப்பை தொடர்ந்து தபால் மூல வாக்களிப்பும் நடைபெற்று முடிந்து தற்போது 06ஆம்
திகதி தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் தயாராகி வருகின்றனர்.
தேர்தலுக்கு
இன்னும் ஆறு நாட்கள் உள்ள நிலையில் இன்று 30.04.2025 இரவு 08:50 வரையிலும்
திணைக்களம் தெரிவித்தது போன்று போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் தேர்தல்
திணைக்களத்தின் இணையத்தளத்தினில் பதிவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் இதே போன்று தேர்தல்
திணைக்களமானது வேட்பாளர் விபரங்களை முன்கூட்டியே இணையத்தளத்தினில் பதிவேற்றி
இருந்தது.
எனினும், இதுவரையிலும் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின்
விபரங்களை பதிவேற்றப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
