Home முக்கியச் செய்திகள் யாழிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் டித்வா புயல்!

யாழிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் டித்வா புயல்!

0

இலங்கைக்கு தென்கிழக்கே உருவான “டித்வா” புயல் யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட தமிழகத்தை நோக்கி குறித்த புயல் நகர்ந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

அதன்படி, தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (29.11.2025) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வங்கக்கடலில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழக கடலோர பகுதிகளை டித்வா புயல் நெருங்கி வருவதாகவும் சென்னையில் இருந்து தெற்கே 380 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version