Home இலங்கை சமூகம் என்.பி.பி தரப்பால் தடுக்கப்படும் வலி. வடக்கு அபிவிருத்தி! தவிசாளர் சுகிர்தன் குற்றச்சாட்டு

என்.பி.பி தரப்பால் தடுக்கப்படும் வலி. வடக்கு அபிவிருத்தி! தவிசாளர் சுகிர்தன் குற்றச்சாட்டு

0

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் அபிவிருத்தி திட்டங்களை தேசிய மக்கள் சக்தி சார்ந்த உறுப்பினர்கள் தடுப்பதற்கு முயற்சி செய்வதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர்
சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை வீதி புனரமைப்பு தொடர்பான பணிகளுக்கு எதிராக போராட்டம் ஒன்று இடம்பெறுவதாக தனக்கு அழைப்பு கிடைக்கப்பெற்றது.

பெண் உறுப்பினர் 

இவ்வாறு போராட்டம் செய்யும் முன்னர் அந்த வீதி திட்டத்தில் உள்ள குறைகளை பிரதேச சபைக்கு தெரியப்படுத்தவேண்டும்.

இதனையே தன்னை தொடர்பு கொண்ட தொலைபேசி அழைப்பாளரிடம் தெரிவித்திருந்தேன். ஆனால் இந்த விடயத்தை யூட்டியுப் மூலமாக திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளனர்.

எனினும் குறித்த பகுதிக்கு போராட்டம் இடம்பெற்ற அடுத்த நாள் அதிகாரிகளுடன் சென்றிருந்தேன்.

இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலை சிலர் காணொளியாக பதிவுசெய்துள்ளனர்.

இவ்வாறே குறித்த தேசிய மக்கள் சக்தி சார்ந்த பெண் உறுப்பினர் வேண்டுமென்றே பழி சுமத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்” என்றார்.   

NO COMMENTS

Exit mobile version