Home இலங்கை சமூகம் கொழும்பிலுள்ள தொடருந்து நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

கொழும்பிலுள்ள தொடருந்து நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

0

அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் கொழும்புத் துறைமுகத்தை அண்டியதாக அமைந்துள்ள சில தொடருந்து நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அனுமதி

இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொம்பனித்தெரு, தெஹிவள, மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய தொடருந்து நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கின்ற முதலீட்டாளர்களை அடையாளங் காண்பதற்காக விருப்பு மனுக் கோரப்பட்டுள்ளது.    

Source: https://tamilwin.com/article/development-of-railway-station-1726016026

NO COMMENTS

Exit mobile version