Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் பல அபிவிருத்திகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல்

கிளிநொச்சியில் பல அபிவிருத்திகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல்

0

கிளிநொச்சி மாவட்டத்தின் வீடமைப்பு, மின்சாரம், நீர்வழங்கல், கண்ணிவெடியகற்றல்
உட்பட பல்வேறு விடயங்களின் முன்னேற்றம் தொடர்பாக நகர அபிவிருத்தி
நிர்மானத்துறை மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் T.B சரத் தலைமையில்
கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் கலந்துரையாடல்
இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன்,
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் ம.மோகன், பிரதேச சபை
உறுப்பினர்கள் துறைசார்ந்த திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் கலந்து
கொண்டனர்.

அமைச்சின் நிதி

கலந்துரையாடலைத் தொடர்ந்து பிரதியமைச்சர் பரந்தன் பகுதியில் குறித்த
அமைச்சின் நிதியில் அமைக்கப்பட்ட வீட்டினை பயனாளியிடம்
கையளித்திருந்தார்.

அதனை தொடர்ந்து பரந்தன் பகுதியில் குறித்த அமைச்சின் நிதியூடாக
நிர்மானிக்கப்படவுள்ள வீட்டுக்கான அடிகல்லும் நாட்டி வைத்தார்.

தொடர்ந்து
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் புன்னைநீராவி மற்றும் கரைச்சி பிரதேச
செயலாளர் பிரிவில் இராமநாதபுரம் கிராமத்தில் 2017மற்றும் 2019ம் ஆண்டு
காலப்பகுதியில் வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின்
பூரணப்படுத்த முடியாத நிலையினையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

அத்துடன் முன்னைய அரசாங்கத்தினால் இடை நடுவே நிறுத்தப்பட்டுள்ள வீட்டு
திட்டத்தின் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக சென்று அவர்களின் தற்போதைய
நிலைமை தொடர்பாகவும் கேட்டறிந்ததுடன் இவ்வீட்டுத்திட்டத்தி பாதிக்கப்பட்ட
வீடுகளை உடனடியாக புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட
உள்ளதாகவும் இதன் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்தார். 

NO COMMENTS

Exit mobile version