Home ஏனையவை ஆன்மீகம் சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கு புதுடில்லியில் இருந்து வருகை தந்த பக்தர்கள்

சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கு புதுடில்லியில் இருந்து வருகை தந்த பக்தர்கள்

0

வரலாற்று சிறப்புமிக்க சீதா எலிய
சீதையம்மன் ஆலயத்திற்கு இந்தியா புதுடில்லியில் (New Delhi) இருந்து சுவாமி அஜய் பாய் தலைமையிலான 100 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

ஆலய வழிபாட்டினை தொடர்ந்து சீதையம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின் முதன் முதலாக சுந்தரகாண்டம் பாராயணம் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் (Velusamy Radhakrishnan) உட்பட ஆலய நிர்வாக சபையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

ஆலய தலைவர் கௌரவிப்பு

இதன்போது, இக்குழுவினரால் ஆலய தலைவருக்கு சால்வை போர்த்தி கௌரவிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

   

Source: https://tamilwin.com/article/devotees-from-new-delhi-visit-seethaliya-kovil-1716992672

NO COMMENTS

Exit mobile version