Home ஏனையவை ஆன்மீகம் மல்வத்து – அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற ஜனாதிபதி

மல்வத்து – அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற ஜனாதிபதி

0

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா
விழாவில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு
மகா நாயக்க தேரர்கள் உட்பட அனுநாயக தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

ஜனாதிபதி குறித்த விஜயத்தை நேற்றைய தினம்(27.08.2026) மேற்கொண்டிருந்தார்.

தேரர்களிடம் ஆசி பெற்ற ஜனாதிபதி

முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து தரப்பின்
மகா நாயக்க  திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள மகா நாயக்க
தேரரைச் சந்தித்து ஆசி பெற்றமையுடன், அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடலிலும்
ஈடுபட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மல்வத்து தரப்பின் அனுநாயக அதிவணக்கத்துக்குரிய
திம்புல்கும்புரே விமலதம்ம அனுநாயக தேரரையும் சந்தித்து, அவரிடமும் ஆசி
பெற்றதோடு சிறுகலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி,
அஸ்கிரி தரப்பின் மகா நாயக்க வராகொட ஸ்ரீ ஞானரதன மகா
நாயக்க தேரரின் நலன் விசாரித்ததோடு அவருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் மத்திய மாகாண ஆளுநர் நிபுணத்துவ வைத்தியர் ஹர்ச சுரங்கவும் இந்தச் சந்திப்பில்
இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/president-receive-blessing-asgiri-mahanayake-monks-1787898917

NO COMMENTS

Exit mobile version