Home இலங்கை அரசியல் சதோசவின் வீழ்ச்சியில் தம்மிக்க பெரேராவின் புதிய திட்டம்.. அம்பலமாகும் உண்மைகள்!

சதோசவின் வீழ்ச்சியில் தம்மிக்க பெரேராவின் புதிய திட்டம்.. அம்பலமாகும் உண்மைகள்!

0

சதோச அதன் 100 கடைகளை மூட முடிவு செய்துள்ள நேரத்தில், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா சில்லறை வணிகத்தில் நுழைந்து 100 புதிய பல்பொருள் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது யூடியூப் செனலில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“சதோச அதன் 130 கடைகளை மூட முடிவு செய்துள்ளது, அவற்றில் 30 ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. மேலும் 100 கடைகள் மூடப்படும். அரசாங்கத்தால் வணிகத்தை நடத்த முடியாததால் அதை தனியார்மயமாக்குவது குறித்து பேசப்பட்டது.

புதிய கடைகள்

எவ்வாறாயினும், ஜா-எல சதோச போன்ற கடைகள் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு இலட்சம் ரூபாய் வரை பெறுமதியான விற்பனையில் ஈடுபடுகின்றன.

சதோசா 100 கடைகளை மூட முடிவு செய்துள்ள நேரத்தில், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா சில்லறை வணிகத்தில் நுழைந்து 100 புதிய பல்பொருள் சில்லறை கடைகளை திறப்பதாக அறிவித்துள்ளார்.

முன்னதாகவும் தம்மிக்க பெரேரா சதோசவை சொந்தமாக்க ஒரு திட்டத்தை முன்வைத்திருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version