Home சினிமா தனுஷ் நடித்த குபேரா படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

தனுஷ் நடித்த குபேரா படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

0

தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் நடித்தும், இயக்கியும் கடந்த ஆண்டு வெளிவந்த ராயன் மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் சில தினங்களுக்கு முன் வெளிவந்தது.

பின், இட்லி கடை எனும் படத்தையும் இயக்கி வருகிறார். இயக்கத்தை தாண்டி தனுஷ் ஹீரோவாக மட்டும் நடித்து வரும் படம் குபேரா.

சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.

ரிலீஸ்

இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான போஸ்டரை அவர்கள் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதன்படி, இப்படம் இந்த ஆண்டு ஜூன் 20 – ம் தேதி வெளியாக உள்ளது.  

Source: https://cineulagam.com/article/dhanush-movie-release-date-1740640829

NO COMMENTS

Exit mobile version