Home சினிமா தனுஷின் குபேரா படத்தின் ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்.. எப்போது தெரியுமா?

தனுஷின் குபேரா படத்தின் ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்.. எப்போது தெரியுமா?

0

 தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமன்றி இயக்குனராகவும் தற்போது வலம் வருகிறார்.

இவர் இயக்கியும், நடித்தும் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ராயன். அதன் பின், சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடிக்க கமிட்டானார்.

இந்த படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பாக்கப்பட்டது. அதன்படி, படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

எப்போது தெரியுமா  

ஆனால் இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக தற்போது வாய்ப்புகள் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தவிர்க்க முடியாத சில காரணங்களால் குபேரா படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போயிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.  

Source: https://cineulagam.com/article/dhanush-movie-release-date-changed-1736137155

NO COMMENTS

Exit mobile version