திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் நீண்டகாலமாக நிலவி வந்த காணி சம்மந்தமாக நிலவி வந்த காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக காணி கச்சேரி நடமாடும் சேவை இன்று (20)தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நடமாடும் சேவையில் வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பிரதியமைச்சர் அருண் கேமசந்திரா கலந்து கொண்டார்.
இதில் நீண்டகாலமாக நிலவி வந்த பொது மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு வழங்கப்பட்டது.இதில் சுமார் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இதில் உதவி காணி ஆணையாளர் என். அருள் செல்வன், தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட காணி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்,
காணிக்கான ஆவணங்களை பெற பல முறை முயற்சித்த போதிலும் தீர்வு கிடைக்கவில்லை தற்போதைய நிலையில் காணிக்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் தற்போதைய நிலையில் கிடைக்கப்பெற்றன இதற்காக பிரதியமைச்சர் அருண் கேமசந்திரா மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலாளருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
முன்னர் நடைபெற்ற காணி நடமாடும் சேவையில் கடந்த கால அரசாங்கம் மூலமாக எதுவும் கிடைக்கவில்லை தற்போது இன்றைய காணி நடமாடும் சேவையின் போது எனது ஆவணங்களை முன்வைத்த போது எதிர்வரும் திங்கட்கிழமை காணி உரிமை பத்திரத்தை பெற்று தருவோம் என இங்கு கூறினார்கள்.
இதன் போது உரையாற்றிய பிரதியமைச்சர் *அருண் கேமசந்திரா*
திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. தம்பலகாமம் பிரதேச செயலகம் மூவின சமூகங்களை சேர்ந்தவர்களும் வாழ்கின்றனர் இங்கு பல காணி பிணக்குகள் காணப்படுகின்றன இதனை தீர்க்க முயற்சித்து வருகிறோம்.
இந்த நடமாடும் சேவை மூலமாக எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்காவிட்டாலும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இலங்கை பல்வேறு தரப்பட்ட பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி உலகளாவிய ரீதியில் தலை சிறந்த நாடாக மாறி வருகிறது.
ஊழல் மோசடி வீண் விரயம் இல்லாத சிறந்த அரசியல் கலாசாரம் கொண்ட நாடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையின் கீழ் கட்டியெழுப்பி வருகிறோம். மக்கள் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதுதான் முன்னிலைப்படுத்தும் விடயமாகும் அரசியல் தலைவர்களாக நாங்கள் இருக்கிறோம் சிறந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரினதும் ஒத்துழைப்புடன் முன்னேற வேண்டும்.
எந்த சவாலாக இருந்தாலும் அதற்கு முகங்கொடுத்து முன்னேறி வருகிறோம் பல பிரச்சினைகள் இருந்தாலும் சரியான முகாமைத்துவம் ஊடாக கொண்டு செல்ல வேண்டும். மக்கள் ஆணை அதிகாரத்தை வழங்கிய நிலையில் என்றும் மக்களுக்கான அடிப்படை பிரச்சனைகளுக்கான தீர்வுக்காக எத்தனிப்போம் எனவும் மேலும் தெரிவித்தார்..
