Home சினிமா பாலிவுட்டில் தனுஷுக்கு ஜோடியான 34 வயது முன்னணி நடிகை.. வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாலிவுட்டில் தனுஷுக்கு ஜோடியான 34 வயது முன்னணி நடிகை.. வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0

தனுஷ் TERE ISHK MEIN

நடிகர் தனுஷ் கடந்த 2013ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆனந்த் எல். ராய் – தனுஷ் கூட்டணியில் உருவான திரைப்படம்தான் அட்ராங்கி ரே. இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

64 வயது நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்.. முதல் முறையாக இணையும் ஜோடி

இதனால் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. ரஞ்சனாவின் உலகத்திலிருந்து TERE ISHK MEIN எனும் படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த 2023ல் வெளிவந்த நிலையில், இந்த ஆண்டுதான் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

கதாநாயகி அறிவிப்பு

ஆனால் இதுவரை கதாநாயகி என அறிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு வீடியோவின் மூலம், TERE ISHK MEIN திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக, பாலிவுட் முன்னணி நடிகை க்ரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இப்படம் இந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி வெளிவரும் என்றும் இந்த வீடியோவில் அறிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version